சினிமா

தடுப்பூசி போட்டுமா இப்படி? கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல முன்னணி தமிழ் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள்

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் ஏராளமானோர் உயிரிழந்த அவலமும் நேர்ந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சினிமா மட்டுமின்றி சீரியலிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த அவர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் தான் நடித்துவந்த சித்தி 2 சீரியலிலிருந்து விலகி தனது கணவரின் சமக கட்சியின் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    


Advertisement