சினிமா

சரத்குமாரை தரக்குறைவாக பேசியவருக்கு, கடுமையான பதிலடி கொடுத்த பிரபல நடிகையின் மகள்.!

Summary:

radhika daughter answered ro who tease sarathkumar

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சரத்குமார், தனது மனைவி ராதிகா, மகள் ரயன் மிதுன் மற்றும் அவரது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை  மிகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்ட்ர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் அதனை மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.இதனை கண்ட ரயன், தனது தந்தையை  தவறாக பேசியவருக்கு மிகவும் கடுமையாக பதிலடி கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இதுதான் நம் வாழும் உலகம்.எனது தந்தை மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான்.ஏனெனில் அவருக்கு அருமையான மனைவி, 4 பிள்ளைகள், ஒரு பேரன் மேலும் அவர் மீது பாசம் வைத்திருக்கும் ஒரு குடும்பம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் வழக்கமாக இது போன்று கலாய்ப்பவர்களை நான் எப்பொழுதும் கண்டுகொள்ள மாட்டேன். நான் இதை எனது சிறுவயதிலிருந்து  திருமணம் மற்றும் தற்போது எனக்கென ஒரு குழந்தை வந்தபிறகும் சந்திக்கிறேன். ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து தனியாக வாழ தன்னம்பிக்கையும் அதிகமான  தைரியமும்  வேண்டும். மேலும்  தனிபெண்ணாக ஒரு தொழிலை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது எளிது அல்ல.அனால் எனது தாய் அதெல்லாம் செய்தார்.அவர்தான் சிறந்த தாய் என்று தனது அம்மா வாழ்வில் பட்ட கஷ்டங்களை விளக்கி ரயன் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு எனது தந்தை சரத்குமார் ஒரு சிறந்த மனிதர். அவர்  தன்னை ஒரு நாளும் பாரமாக பார்த்தது இல்லை. தனக்கு சொந்த மகள் போலவே பாசம் காட்டியுள்ளார், அதற்கும் மனது வேண்டும. அவர்தான் என் தந்தை என்று ரயன் தெரிவித்துள்ளார்.