என்னது இத்தனை தொழிலை கவனித்து கொள்கிறாரா நடிகை ராதா - வியப்பில் ரசிகர்கள்!

என்னது இத்தனை தொழிலை கவனித்து கொள்கிறாரா நடிகை ராதா - வியப்பில் ரசிகர்கள்!


Radha manage lots of works

80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த முக்கியமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராதா. அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடம் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்றவர்கள்.

அம்பிகா மற்றும் ராதா தங்களது சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப்  பெற்றவர்கள்.

தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ்  சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றார். மேலு‌ம் தனது சொந்த தொழிலை கவனித்து வருவதால் அவ்வளவாக நடிக்க முடியவில்லை என ராதா கூறியுள்ளார். 

அவர் சென்னை மற்றும் கேரளாவில் ஃபிலிம் ஸ்டூடியோஸ், கேரளாவில் மூன்று 5 ஸ்டார் ஹோட்டல்கள், ஸ்கூல், மும்பையில் பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர் என பல தொழிலை நடத்தி வருகிறாராம்.இதனை கேட்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.