ஆற்றில் வழுக்கி விழுந்த பிரபல பாடகர் நீரில் மூழ்கி பலி! அதிர்ச்சி சம்பவம்!!

சுற்றுலா சென்ற இடத்தில் கால் தவறி ஆற்றில் விழுந்த பிரபல பாடகர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங். இவர் சுஃபி பாடல்களை பாடி பிரபலமானவர். மேலும் மன்மீத் சிங் செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் உள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் தனது நண்பர்கள் சிலருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பின்னர் தர்மசாலாவில் இருந்து கரேரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த சில நாட்களாகவே கனத்த மழை கொட்டித் தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றின் கரையோரம் நின்று மன்மீத் சிங் வெள்ளப்பெருக்கை ரசித்துக்கொண்டு இருந்தபோது, அவர் மழைநீரில் வழுக்கி திடீரென்று ஆற்றுக்குள் விழுந்துள்ளார்.
பின் அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதனை அவரது நண்பர்கள் கதறித் துடித்துள்ளனர். ஆனாலும் யாராலும் காப்பாற்ற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு கங்க்ரா மாவட்டத்தில் ஆற்றின் கரையோரத்தில் மன்மீத் சிங்கை பிணமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.