சினிமா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகை! புகைப்படம்!

Summary:

Pudukkotaiel irundhu saraanan actress current photo

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களில் ஒன்றுதான் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தனது குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூர் செல்வதும், பின்னர் அங்கிருந்து இந்தியா திரும்புவதும் பெற்றிய சுவாரசியமான கதைதான் இந்த படம்.  இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பிள்ளை.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் அபர்ணா பிள்ளை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது, இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் ஏபிசிடி, நெஞ்சில் ஜில் ஜில், கண்ணுக்குள்ளே ஆகிய தமிழ் திரைப்படத்திலும் டிசம்பர் என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால்  கடந்த 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார் அபர்ணா. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஒரு நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் அபர்ணா.

இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் ஓன்று வெளியாகியது. இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement