சிறை அனுபவம் குறித்து சுவாரஷ்ய தகவலை பகிர்ந்துகொண்ட ரவீந்தர்: டிடிஎப், செந்தில் பாலாஜி குறித்தும் கருத்து.!



Producer Ravindar Share Jail Experience  

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டவராக இருந்து வந்தவர் ரவீந்தர். இவர் சமீபத்தில் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ரவீந்தர் அமெரிக்காவை சேர்ந்த தமிழரிடம் படம் எடுப்பதாக கூறி, ரூ.15 இலட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரவீந்தர் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 30 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலையானார். இதனையடுத்து, தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்த இருக்கிறார்.

அந்த பேட்டியில், தான் சிறையில் கழிவறை செல்ல மிகப்பெரிய சிரமத்தை சந்தித்தாகவும், ஒருவர் தனக்கு வெளிநாட்டு கழிப்பறையை உபயோகம் செய்ய உதவினார். நான் உட்கார 3 பேர், எழுந்திருக்க 3 பேர் என 6 பேர் உதவி செய்தார்கள். பின்னர் நானாக தினமும் சுவரை பிடித்து முட்டிபோட்டு எழுந்துகொள்ள பழகிக்கொண்டேன். 

நான் கீழே உட்கார்ந்ததே இல்லை. எனது அம்மாவும் அதனையே கேட்டார். கைது செய்யப்படும்போது எனது மனைவிக்கு என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. பகல் வேலைகளை விட இரவு வேளைகளில் தான் நான் சிறையில் கஷ்டப்பட்டேன். 50 பேர் இருக்கும் இடத்தில் நானும் அடைக்கப்பட்டேன். 

இரவு நேரத்தில் நான் கழிப்பறை செல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். முதலில் ஒருசிலரை உதவிக்கு அழைத்து எழுந்து சென்றேன். பின்னர் நானே தவழ்ந்து சென்று சுவரை பிடித்து எழுந்து கழிவறைக்கு சென்றேன். டிடிஎப் வாசனையும் பார்த்தேன். 

அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தோசமாக, தேவையானதை சாப்பிட்டு இருப்பதாக கூறினார்கள். ஆனால், அவை உண்மையல்ல. சிறையில் வழங்கப்படும் உணவுகளில், அவரின் உடல்நிலைக்கேற்ப எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகளை மட்டுமே அவர் சாப்பிடுகிறார்" என கூறினார்.