நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்ப? நடிகை நிதி அகர்வாளிடம் ரசிகர் கேட்ட கேள்வியை பாருங்க.
கமல் தான் உளறுவாரு., நீ என்னடா பெருசா கிழிச்சிட்ட?. அஸ்வினை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்.!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டவர் அஷ்வின். இவரை அறிமுகம் செய்ய பல சித்து வேலைகள் பார்க்கப்பட்டு, இன்று அவர் திரைப்படம் நடிக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.
கடந்த 2014 ஆம் வருடம் முதல் திரைப்படங்களில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தாலும், அவருக்கென தனித்த அடையாளம் தோன்றவில்லை. அதனை உருவாக்கித்தந்தது விஜய் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அஸ்வின், பல இயக்குனர்களிடம் கதையை கேட்டு தூங்கிவிட்டேன். அவ்வாறு நான் தூங்காமல் கேட்டது தான் இந்த படம் என்று பேசி இருந்தார். இவரின் ஆணவ பேச்சுக்கள் பலரிடமும் பெரும் கொந்தளிப்பை தந்தது. மேலும், இவரது ரசிகர்கள் என்ற பெயரில் உள்ளவர்கள், இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என ஏத்திவிட ஆரம்பிவித்துவிட்டனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் கே. ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து இருந்தார். இந்த பேட்டியில், அஸ்வினின் பேச்சுக்கள் குறித்து கேட்கப்பட்டது. இதன்போது அவர் பதிலளிக்கையில், "அஸ்வின் என்ன அவ்வுளவு பெரிய ஆளா?. 40 கதை கேட்கையில் தூங்குகிறார் என்றால், அவருக்கென்ன இயக்குனர் தாலாட்டு பாடிக்கொண்டு இருந்தாரா?. 40 எழுத்தாளர்களை அவர் அவமதித்து இருக்கிறார்.
ஒரு எழுத்தாளரின் கதை கருவில் தான் அவன் நாயகனாக உருவாகிறான். பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் திரைத்துறையில் அடையாளம் இல்லாமல் பணியாற்றும் பலரையும் கடவுளாக மதிக்கிறார்கள். இவன் என்ன அவமதித்து இருக்கிறான். ரஜினி, அஜித், விஜய் என்றாவது இப்படி பேசியிருப்பார்களா?. ரஜினி பேசும் போது வார்த்தைகளில் தெளிவாக இருப்பார்.
கமல் தான் எதாவது உளறிக்கொண்டே இருப்பார். அதனைப்போல,விஷாலும் எதையாவது உளறுவார். இவனின் முதல் படத்திலேயே இப்படி பேச்சுக்கள் என்றால், ஒரு படம் வெற்றி அடைந்தால் எல்லோரையும் இழிவுபடுத்தமாட்டான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று காட்டத்துடன் பேசியிருக்கிறார்.