அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பிரியங்கா மோகனா இது.. வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

மேலும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டா, எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன்.

சினிமாவில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கருப்பு பேரழகி என்று ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.