உங்களுக்காக நான் என்ன செய்தேன்.! ஏன் இப்படி?? கண்கலங்கி தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட எமோஷனல் வீடியோ!!

உங்களுக்காக நான் என்ன செய்தேன்.! ஏன் இப்படி?? கண்கலங்கி தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட எமோஷனல் வீடியோ!!


priyanga-shares-video-about-malaysia-people-love

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. கலகலப்பாக, சுட்டிதனத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்

பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். மேலும் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். அதுமட்டுமின்றி அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதில் தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு லட்சக்கணக்கான பாலோவர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரியங்கா தற்போது மலேசியா சென்றது குறித்தும், மக்கள் தனக்கு ஆதரவளித்தது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மலேசியா மக்கள் காட்டிய அன்பால் நான் நெகிழ்ந்து போனேன். உங்களுக்காக நான் என்ன செய்தேன்? எதற்காக என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தவறோ என நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது மலேசிய மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர். வாழ்த்து கூறினர் மிக்க நன்றி என கண்கலங்கி எமோஷனலாக பேசியுள்ளார்.