"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
மாகாபாவை தூக்கிய விஜய் டிவி! இனி எல்லாமே பிரியங்காதானா! அப்படி என்னதான் நடந்தது??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலகலப்பான பேச்சாலும், செயலாலும் தொகுத்து வழங்கி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் மாகாபா ஆனந்த். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மாகாபா தொகுப்பாளார் மட்டுமில்லாது சிறந்த நடிகரும் கூட.
இவர் வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை, அத்தி, மீசையை முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக், இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் வெள்ளித்திரை அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. மாகாபா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து மாகாபா விலகி விட்டதாகவும், அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் எனவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் உண்மையில், மாகாபா குடும்பத்துடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளதால் விஜய்டிவியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளதாகவும், அவர் வரும் வரையே நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.