ப்ரியா பவானி ஷங்கரின் காதலர் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? இதோ!



Priya bavani shanker lover job details

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல்வரை சீரியல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து சினிமா பக்கம் தலை காட்டினார் ப்ரியா.

இவரது நடிப்பில் வெளியான மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. சினிமாவில் இவரது புகழ் அதிகரித்தாலும் ஒருபக்கம் இவரது காதல் பற்றிய கிசு கிசுப்புகள் அதிகரித்தன.

priya bavani shankar

இந்நிலையில் பிரியா அவரது கல்லூரி நண்பரான ராஜ்வேலுவை காதலிக்கிறார் என்று கூறப்பட்டது. ராஜ்வேல் என்பவர், பிரியாவுடன் ஒன்றாகவே படித்து ப்ரியாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிடித்தமானவர்.

தற்போது சிட்னியில் ஐ.டி.துறையில் வேலை பார்க்கிறார். அவரது பேஸ்புக் பக்கத்தில் சமீபத்திய போஸ்டாக ப்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது உள்ளது.