சினிமா

பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்! யாரும் எதிர்பாராத கூட்டணி!

Summary:

Priya bavani shankar casting with vikram in new movie

கல்யாணம் முதல் காதல்வரை என்ற தொடர்மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவருக்காகவே இந்த தொடரை பார்த்த ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம். மேலும், இளைஞர்களையும் டிவி தொடர் பார்க்க வைத்த பெருமை இந்த அம்மணியையே சேரும்.

இந்நிலையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை நோக்கி பயணம் செய்த இவர் நடிகர் வைபவுக்கு ஜோடியாக மேயத்தமான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவரும் இவர் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பறுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க அடுத்ததாக இவர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கேட்ட இவரது ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.


Advertisement