இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சீரியல் மகளுடன் நடிகை பிரியா பவானி சங்கர்! தீயாய் பரவும் செம க்யூட் புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா பவானி சங்கர். இவருக்காகவே பல இளைஞர்களும் சீரியல் பார்க்க துவங்கினர். இவ்வாறு சின்னத்திரையில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா பின்னர் டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரைக்கு தாவினார்.
மேலும் அவர் மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இந்தியன் 2 , மாபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பயங்கர பிசியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் தனக்கு மகளாக நடித்த குழந்தையுடன் பிரியா பவானி சங்கர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் சிறந்த அம்மா மகள் என கூறி வருகின்றனர்.