
தற்காலத்தில் சினிமா நடிகர்களைப் போலவே சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்ட
தற்காலத்தில் சினிமா நடிகர்களைப் போலவே சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகர்களில் ஒருவர் பிரஜன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்து பெருமளவில் பிரபலமான அவர் தற்போது அன்புடன் குஷி என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவரது மனைவி சாண்ட்ரா. இவரும் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறந்த காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்த இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் அழகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
அக்குழந்தைக்கு அவர்கள் ருத்ரா, மித்ரா என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பிரஜன் - சான்ட்ரா தம்பதியரின் குழந்தைகளின் இரண்டாவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அதனை கண்ட ரசிகர்கள் செம கியூட் என குழந்தைகளை கொஞ்சி வருகின்றனர்.
Advertisement
Advertisement