தமிழகம்

பேய் விரட்டுவதாக கூறி கொடூரமாக போலி சாமியார் அரங்கேற்றிய வெறிச்செயல்! பதறவைக்கும் சம்பவம்!!

Summary:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்சநாயக்கனுரில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் க

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்சநாயக்கனுரில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் காதப்பள்ளியை சேர்ந்த அனில் குமார் என்ற 45 வயது நிறைந்த நபர்  பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் பேய் பிடித்து விட்டதாக கூறி பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

இந்தநிலையில் சாமியாரான அனில்குமார் பேய் விரட்டுவதாக கூறி அந்த பெண்ணை கம்பால் அடித்து, காலால் எட்டி உதைத்து பயங்கரமாக கொடுமைபடுத்தியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காலால் உதைத்தார்

இதனிடையே இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி அடுத்த  பொம்மம்பட்டி கிராம அலுவலர் சஞ்சய்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார்கள் சாமியார் அனில் குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement