பூஜா ஹெக்டே போலவே ஸ்லிம்மா இருக்கணுமா? அவரே கூறிய டயட் மற்றும் ஃபிட்னஸ் ரோட்டீன்கள்!



pooja-hegde-weight-loss-diet-fitness-secrets

தமிழ் திரையுலகில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை வழங்கி புகழ் பெற்றார். முகமூடி படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலமாக தமிழில் தனது ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

தற்போது, தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான "ஜனநாயகன்" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படித் திரையுலகில் இருந்து நீண்ட காலமாக திகழ்ந்து வருகிற பூஜா, தனது மெல்லிய மற்றும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை சிறப்பாக பேணிக் கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. தன்னுடைய எடையை எப்போதும் சமநிலையிலே வைத்திருக்க அவர் பின்பற்றும் சில டயட் ரகசியங்களைத் தான் இங்கு பகிர்கிறோம்.

இதையும் படிங்க: எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் இருக்காங்க.! அதற்காக இதெல்லாம் நடக்குமா?? போட்டுடைத்த நடிகை பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டேவின் எடை குறைக்கும் டிப்ஸ்:

1. காலை துவக்கம் – எலுமிச்சை நீர்

தினமும் காலையில் எழுந்தவுடன் பூஜா, எலுமிச்சை கலந்த சூடான நீரை குடிப்பதைக் வழக்கமாக வைத்துள்ளார். இது உடலை டிடாக்ஸ் செய்யும்.

2. புரதம் நிறைந்த காலை உணவு

முட்டையின் வெள்ளைக்கரு, அவகேடோ டோஸ்ட், ஸ்மூதீஸ் போன்ற உணவுகளே அவரது காலை உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

3. காலை ஸ்னாக்ஸ் (11 மணி)

சில ஹெல்தி ஸ்னாக்ஸ் – ஒரு கைப்பிடி பாதாம், வால்நட்ஸ் அல்லது பழங்களை எடுத்துக்கொள்வது அவரது வழக்கம்.

4. மதிய உணவு

கிரில் சிக்கன் அல்லது மீன், பிரவுன் ரைஸ், குயினோவா, மற்றும் ஃபைபர் நிறைந்த காய்கறிகளைப் பயன்படுத்துவார். இது உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களையும் புரதத்தையும் அளிக்கிறது.

5. மாலை ஸ்னாக்ஸ்

சூப், டோஃபு, அல்லது பனீர் – இவற்றில் ஏதேனும் ஒன்றை மாலை உணவாகக் கொண்டு, வயிற்றை இலகுவாக வைத்திருப்பதை அவர் முக்கியமாகக் கவனிக்கிறார்.

6. அதிகமாக நீர் மற்றும் டிடாக்ஸ் பானங்கள்

தண்ணீரை அதிகமாகக் குடிப்பதோடு, கிரீன் டீ, பழச்சாறு மற்றும் டிடாக்ஸ் பானங்களைவும் அதிகம் பயன்படுத்துகிறார்.

 

 

இதையும் படிங்க: கருப்பு உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்! இணையத்தில் வைரல்...