நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் ட்ரெய்லர்..! அசத்தும் வழக்கறிஞராக ஜோதிகா..! வெளியானது பொன்மகள் வந்தாள் ட்ரெய்லர்.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் ட்ரெய்லர்..! அசத்தும் வழக்கறிஞராக ஜோதிகா..! வெளியானது பொன்மகள் வந்தாள் ட்ரெய்லர்.!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் நடிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தால் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் உள்ளது. குறிப்பாக சினிமா துறையில் அனைத்து வேலைகளும் கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகவேண்டிய பல்வேறு படங்கள் வெளியாகாமல் காத்திருக்கிறது.

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள பொன்மகள் வந்தால் படமும் கொரோனா காரணமாக கிடப்பில் கிடந்தநிலையில் அமேசான் பிரைம் தளத்தில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

ஒருவழியாக படம் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்மகள் வந்தால் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி பட்டையை கிளப்பிவருகிறது. கொரோனா காரணமாக எந்த ஒரு படம், ட்ரைலர் என பாக்காமல் இருந்த ரசிகர்களுக்கு  பொன்மகள் வந்தால் படத்தின் ட்ரைலர் சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo