சினிமா

90 ml படத்தால் நடிகை ஓவியாவுக்கு இந்த நிலைமையா? என்ன நடக்கபோகிறதோ? பதற்றத்தில் ரசிகர்கள்.!

Summary:

police complaint against oviya

தமிழில் சமீபத்தில் அனிதா உதூப் இயக்கத்தில் உருவான திரைப்படம் 90ml. இதில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை  ஓவியா நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். மேலும் ட்ரைலர் வெளியானதிலிருந்து சர்ச்சையை கிளப்பிய இந்த திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படம் வெளியாகி சில ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலர் இந்த திரைப்படம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக அமைத்துள்ளது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

90ml movie க்கான பட முடிவு

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர்  அணியினர், 90 ml  படத்தில் இடம்பெற்றுள்ள மது அருந்துவது, புகை பிடிப்பது, படுக்கையறை ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவை கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது.மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

oviya smoking in 90ml movie க்கான பட முடிவு

மேலும் இந்த படத்தின் இயக்குனர் அனிதா உதூப் மற்றும் நடிகை ஓவியா ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.


Advertisement