ரஜினி பட நடிகையை தகாத வார்த்தையால் மோசமாக விமர்சித்த வாலிபர்! அதிரடியாக கைது செய்த போலீசார்!



police-arrest-man-woho-vomment-badly-about-sonakshi-sin

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனாக்சி சின்ஹா. பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் அவர் நடிகர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். 

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் மிகவும் மோசமாக அவதூறு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.   இந்நிலையில் அந்த நபர் குறித்து சோனாக்சி சின்கா போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் விசாரணைக்குப் பிறகு மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தை சேர்ந்த 27 வயது நபரை கைது செய்தனர்.

sonakshi sinha

அதனைத் தொடர்ந்து போலிசாருக்கு நன்றி  கூறி சோனாக்ஷி சின்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேச்சு சுதந்திரம் என்பது அவதூறுகளை பதிவிடுவதற்கான சுதந்திரம் இல்லை. இணையதள உலகம்  பாதுகாப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.  ஆனால் அப்படியில்லை.  அதற்காக  அமைதியாக இருக்கமாட்டேன்.

 என்னுடைய புகாரை ஏற்று, துரிதமாக நடவடிக்கை எடுத்த மும்பை சைபர்  கிரைம் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களும் இதை போல துணிந்து புகார் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.