பாஜகவில் ஐக்கியமானார் கவிஞர் கண்ணதாசனின் மகன்; தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த ஷாக்.!  Poet Kannadhasan Son Annadurai Join BJP 

 

2024-ல் நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்திக்கொண்டு வரும் சூழலில், பிரபலங்கள் மற்றும் செல்வாக்கான நபர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து தனது வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியில் பிற கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் இணைந்து வருகின்றனர். 

சமீபத்தில் அதிமுக எம்.பி மைத்ரேயன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகனும், நடிகருமான அண்ணாதுரை கண்ணதாசன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.