வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பேட்ட படத்தின் வசூல் இதுதான்! அதிகாரபூர்வ வெளியீடு!



Petta movie original collection details

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துல திரைப்படம் பேட்ட. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பேட்ட திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வசூல் ரீதியாகவும் வாரி குவித்து வருகிறது பேட்ட திரைப்படம்.

petta

மேலும் பேட்ட வெளியான அதே நாளில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானதால் பேட்ட, விஸ்வாசம் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் பற்றி சமூக வலைத்தளங்களில் பலவிதமான செய்திகள் வெளிவந்தது.

தற்போது பேட்ட படத்தின் உண்மையான வசூல் குறித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பேசியிருக்கும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்,   “வரும் ஞாயிற்றுக் கிழமையோடு அதாவது பேட்ட படம் வெளியான 11 நாட்களில் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும். இதுதான் உண்மையான நிலவரம்” என்று தெரிவித்துள்ளார்.