சினிமா

பேட்ட படத்தின் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Summary:

petta movie actress shared photos

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படம் தமிழகத்தில் மட்டும் பல கோடி கணக்கில் வசூல் செய்துள்ளது. 

ரஜினி அரசியலில் தடம்பதித்த பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 1980களில் தொடர்ந்து நடித்தது போலவே ரஜினி இப்போது நடித்து வருகிறார். இந்த வயதிலும் அவரால் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடிக்க முடிகிறது. 

இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய 'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 

நடிகை மாளவிகா மோகனன் கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே இடம்பிடித்தார். 

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட்  புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்தநிலையில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக வைத்துள்ளது.


Advertisement