இளைஞர்களின் கனவுக்கன்னி சன்னி லியோன் அதில் நடிக்க தடை இல்லை!. ரசிகர்கள் உற்சாகம்!.

இளைஞர்களின் கனவுக்கன்னி சன்னி லியோன் அதில் நடிக்க தடை இல்லை!. ரசிகர்கள் உற்சாகம்!.



petitioner withdrawed case against sunny leone for veeramadevi movie


ராணி வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க தடை கோாி தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரா் தொிவித்ததை தொடா்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சையை மையமாக கொண்டு ஆட்சி புரிந்த முதலாவது ராஜேந்திரசோழனின் மனைவி ராணி வீரமாதேவி. அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ‘வீரமாதேவி‘ என்ற பெயரில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளி வர உள்ளது. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதனையடுத்து மதுரையைச் சோ்ந்த சரவணன் என்பவா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர்வீரரான வீரமாதேவி, கணவரின் இறப்புக்குப் பிறகு உடன்கட்டை ஏறினாா். அவரது வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் “வீரமாதேவி” என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. 

Sunny Leone

இந்த படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளாா். பல ஆபாச படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆபாச பட நடிகை விருது பெற்ற சன்னி லியோன் வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிப்பது வீரமாதேவியை அவமதிக்கும் செயலாகும். 

மேலும், முதலாம் ராஜேந்திரசோழனுக்கும், அவரது மனைவி வீரமாதேவிக்கும் தமிழகத்தில் பல இடங்களில் கோவில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

Sunny Leone

இந்த மனு நேற்று புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா், நடிகைகள் எந்தக் கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். இந்த மனு பொதுநல வழக்கில் வராது. இதுபோன்ற மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீா்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். 

இதனைத் தொடா்ந்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரா் தொிவித்தாா். அதன்படி வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க தடையில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.