சினிமா

நயன்தாரா இருந்த வேனில் திடீர் ரைடு! ஏன் இந்த ரைடு? அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Summary:

Penalty for nayanthara caravan in kerala

விஸ்வாசம் படத்தை அடுத்து தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ஐரா திரைப்படமும் விரைவில் வெளிவரவுள்ளது. ஹீரோயினாக்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்துவரும் நயன்தாரா தற்போது ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அறிமுக இயக்குநர் தயான் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில், நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்துக்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ எனப் பெயரிட்டுள்ளனர். முதன்முறையாக நயன்தாராவும் நிவின்பாலியும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்புக்காக நயன்தாரா, நிவின்பாலி, இயக்குனருக்கு என மூன்று கேரவன்கள் வரவழைக்கப்ட்டுள்ளது. அதில் ஆடம்பரமான ஒரு கேரவனில் நயன்தாரா ஓய்வெடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த அதிகாரிகள், நயன்தாராவை கீழே இறக்கிவிட்டுவிட்டு கேரவனை சோதனை செய்துள்ளனர்.

அவர்களது சோதனையில் அந்த மூன்று கேரவன்களுக்கும் வரி கட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதன்பின்னார் 2 லட்சம் வரி கட்டிய பிறகே வாகனங்களை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

 


Advertisement