வீட்டிற்கு வரசொல்லி, தனியறையில் பிரபல இயக்குனர் செய்த மோசமான காரியம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

வீட்டிற்கு வரசொல்லி, தனியறையில் பிரபல இயக்குனர் செய்த மோசமான காரியம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!


payal-gosh-talk-about-sexual-harassement-in-cinema-indu-3U48WB

தமிழ் சினிமாவில்  தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். இவர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ஊசரவல்லி, மனோஜ் மஞ்சுவின் பிரயாணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் பட்டேல் கி பஞ்சாபி ஷாதி என்ற படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சாத் நிபானா சாதியா என்ற இந்தி தொடரிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிக்க வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  அவர் கூறியதாவது, சினிமாவுக்கு வந்த துவக்கத்தில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவரை அவரது வீட்டில் சந்தித்தேன். ஆரம்பத்தில் அவர் நன்றாக பேசினார். மேலும் அவரிடமிருந்து மது மற்றும் போதைபொருள் பயன்படுத்திய வாசனை வந்தது. பின்னர் அவர் என்னை அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நிறைய வீடியோ கேசட்டுகள், புத்தகங்கள் இருந்தது.

payal ghosh

பின்னர் ஆபாச பட வீடியோ கேசத்தை போட்டார். அதனை கண்ட நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அவரோ சினிமா துறையில் இதெல்லாம் சகஜம். நான் அழைத்தால் பல பெண்கள் இப்படி என்னுடன் இருப்பார்கள் என்று கூறினார்.ஆனால் ஒரு வழியாக நான் அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி வந்து விட்டேன். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவே எனக்கு மாதகணக்கில் ஆனது என கூறியுள்ளார்.