எலிமினேட் ஆன பவித்ரா கூறிய ஒத்த வார்த்தை! கண் கலங்கிய குக் வித் கோமாளி புகழ்! நெகிழவைத்த வீடியோ!pavitra-talk-proudly-about-in-cook-with-kamali

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், ஷகிலா, அஸ்வின், கனி மற்றும் பவித்ரா ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர் மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் ஆகியோர் சேட்டைகள் செய்துவந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து நேற்று பவித்ரா எலிமினேட் ஆனார். 

இந்நிலையில் பேசிய பவித்ரா, எனக்கு கிடைத்த புகழுகெல்லாம் காரணம் புகழ்தான். அது 200% உண்மை. ஆரம்பத்தில் புகழுடன் சமைத்த அந்த பெண் என அறிமுகமான நான் தற்போது பவித்ரா என அனைவராலும் அறியபட்டுள்ளேன். இது என்னுடைய குடும்பமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு நெகிழ்ந்து போன புகழ், யாருமே தன்னோட புகழுக்கு மற்றவர்கள்தான் காரணம் என கூற மாட்டார்கள். மேலும் இந்த காலத்தில் பிறரை பற்றி பெருமையாக பேசவும் மாட்டார்கள்.  ஆனால் அந்த பெரிய மனசு பவித்ராவிடம் இருக்கிறது.. இதற்கே அவர் மேன்மேலும் உயர்வார் என கண்கலங்கியவாறு கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.