சினிமா

காலைநேர கடற்கரையில், தொடை தெரியும்படி கால்மேல் கால்போட்ட பவானி ரெட்டியின் புகைப்படம் இதோ!

Summary:

சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள

சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது.

தெலுங்கு சீரியல்கள் நடித்து கொண்டிருந்தவர் நடிகை பவானி ரெட்டி. தற்போது தமிழ் சீரியலில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டைவால் குருவி என்ற தொடர் மூலம் தமிழ் சீரியலில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார் பவானி. இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சின்னத்தம்பி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். ராசாத்தி சீரியலில் இவருது நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தார்.

தற்போது சீரியல் சினிமா என எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்  தொடை தெரியும்படி,கால்மேல் கால் போட்டு அவரது அழகிய சிரிப்புடன் "காலை நேர கடற்கரையில் காஃபி கப்புடன்" புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement