வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
ஓவர் ஸீன் போட்ட வேலா ராமமூர்த்தி, ஒதுக்கிவிட்டு அந்த நடிகரை தட்டி தூக்கிய சீரியல் குழு.?! இவர் தான் புதிய குணசேகரன்.!
சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக முதல் இடத்தில் இருந்து வந்த சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் நம்பர் ஒன் இடத்தில் இருந்ததற்கு காரணம் அந்த சீரியலில் இருந்த ஹீரோயினோ, ஹீரோவோ கிடையாது. முழுமுதற் காரணமாக இருந்தவர் வில்லனாக நடித்த மாரிமுத்து தான். வில்லனாக இருந்தாலும் அவரது கம்பீரமான நகைச்சுவையான பேச்சு தான் பலரையும் கவர்ந்து இழுத்தது.
சமீபத்தில் நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்து விட்டார். அதுவும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தானே டிரைவிங் செய்து கொண்டு சென்ற அவர் பத்து நிமிடத்தில் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறந்த பின்னர் அந்த செய்தியை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரை வெறும் நடிகனாக மட்டும் மக்கள் பார்க்கவில்லை என்பதை அவர் இறந்த நாளில் நாம் தெரிந்து கொண்டிருப்போம்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வேலா ராமமூர்த்தியை அணுகி இருக்கின்றனர். ஆனால், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதாக தெரிவித்த நிலையில், அடுத்த கட்டமாக நடிகர்கள் ராதாரவி மற்றும் பசுபதி ஆகியோரிடம் சீரியல் குழுவினர் பேசியுள்ளனர். இதில் பசுபதி நடிக்க இருப்பதாக தற்போது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பு நடிகர் பசுபதி திருப்பாச்சி, விருமாண்டி, இந்தியா பாகிஸ்தான், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.