"அதுக்கு சரியான ஆள் சிம்புதான்".. இயக்குனர் பார்த்திபன் சொன்ன பளிச் பதில்..! இதுதான் விஷயமா?.!

"அதுக்கு சரியான ஆள் சிம்புதான்".. இயக்குனர் பார்த்திபன் சொன்ன பளிச் பதில்..! இதுதான் விஷயமா?.!


parthiban and simbu new film

கோலிவுட் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசத்தை காட்டி வெற்றி கண்டு வரும் இயக்குனர் பார்த்திபன். இவர் நடித்த இரவில் திரைப்படம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுவருகிறது. முன்பு கதையில்லாமல் ஒரு திரைப்படம் எடுத்தார். பின் ஒரே ஒரு மனிதரை வைத்து திரைப்படம் எடுத்தார். 

தற்போது ஒரே ஷார்ட் திரைப்படத்தையும் எடுத்துவிட்டார். இது போன்று வித்தியாசமாக செய்யும் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்ததாக என்ன செய்வார்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அண்மையில் ஒரு நேர்காணலில் பேசிய பார்த்திபனிடம் உங்களது திரைப்படங்களில் "புதியபாதை" திரைப்படத்தை ரீமேக் செய்தாலோ அல்லது இரண்டாம் பாகம் எடுத்தாலோ அதில் யார் கதாநாயகனாக நடிப்பார்கள்? என்று கேட்டனர். 

simbu

அதற்கு சட்டென பதில் அளித்த பார்த்திபன், "புதியபாதை படத்திற்கு சரியான ஆள் சிம்பு தான். இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சாரிடம் நாங்கள் பேசினோம். அவரும் நீ படத்தை எடு என்று தைரியமாக கூறியுள்ளார். சிம்புவும் புதிய பாதை ரீமேக்கில் ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். 

அவர் சரி என்று கூறினால் உடனடியாக கதை தயார்செய்து சூட்டிங் கிளம்ப வேண்டியது தான் என்று பதில் அளித்தார். ஆனால் புதிய பாதை படத்தை அப்படியே எடுக்க முடியாது என்றும், அதற்கு ஏற்றார் போல கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்" என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.