யாருடா அந்த முரட்டு சிங்கிள்! வெளியான பப்பி பட டிரைலரால் குழப்பமான ரசிகர்கள்.
கோமாளி படத்தை தொடர்ந்து வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் தான் பப்பி. இப்படத்தில் போகன், வனமகன் படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த வருண் இந்த படத்தின் மூலம் ஹுரோவாக அறிமுகமாகிறார்.
இதில் ஹுரோயினாக கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பப்பி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டிரைலர் வெளியாகி சில மணி நேரத்திற்குள் 5.5 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் எழுத்து, இயக்கம் முரட்டு சிங்கிள் என எழுதியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். அல்லது இயக்குனர் பெயர் உண்மையாகவே முரட்டு சிங்கிளா என பொறுத்திருந்து பார்ப்போம்.