சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், அப்போவே சூப்பர் ஸ்டார் கூட நடிச்சிருக்காங்களாம்! என்ன படம் தெரியுமா?

Summary:

Pandiyan stores thanam was act in rajini manithan movie

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் சீரியல் நடிகை சுஜிதா. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்ட இவர் இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பின்னர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சுஜிதா. குறிப்பாக தமிழ், தெலுங்கு என இதுவரை 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லீட் நடிகையாக நடித்துவரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள மனிதன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம். மேலும், சத்யராஜின் பூவிழி வாசலிலே, மம்மூட்டியின் அழகன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம் சுஜிதா.

விளம்பர துறையை சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுஜிதாவுக்கு  ஒரு ஆண் குழந்தை உள்ளது.


Advertisement