இனி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை! பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொன்ன குட் நியூஸ்! செம ஹேப்பியான ரசிகர்கள்!!pandiyan stores team return to kunnakudi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேலும் இந்த தொடருடன் பாக்கியலட்சுமி தொடரை இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அந்த எபிசோடுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மீனா,ஜீவா,  கதிர் ஆகியோரை ரொம்பவும் மிஸ் செய்வதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.

pandian stores

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் குன்னகுடிக்கு திரும்பியதாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாயகி சுஜிதா கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பில் இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என செம எதிர்பார்ப்பில் உள்ளனர்.