சினிமா

நடிகர் அஜித்தின் அரிய புகைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்! அட.. அடையாளமே தெரியலையே! சர்பிரைசில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக தல அஜித் குறித்த அரிய மற்றும் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைசாக விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ள சுஜிதாவும் உள்ளார். சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி, ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று ஹிட்டான வாலி படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். அப்பொழுது அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement