சினிமா

குடும்ப குத்து விளக்காக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? எப்படி மாறிவிட்டார் பாருங்கள்

Summary:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்துவரும் ஹேமாராஜின் கலக்கலான மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்துவரும் ஹேமாராஜின் கலக்கலான மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் ஹேமாராஜ். சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி, கர்ப்பமாக இருந்த இவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. பொதுவாகவே பெண்கள் குழந்தை பெற்றபின்னர் கொஞ்சம் குண்டாவது வாடிக்கைதான். ஆனால் ஹேமாராஜ்  செம டயட் மெயின்டைன் செய்து தனது உடலை மிகவும் பிட்டாக வைத்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் மிகவும் மாடர்னான உடை அணிந்து அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement