மாலையும் கழுத்துமாக கோவிலில் நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.! வைரலாகும் புகைபடம்..
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், கணவருக்காக என்ற தொலைகாட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தொடர்ந்து திருவிளையாடல், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மருதாணி, மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, ஒரு கை ஓசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
இறுதியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் தனம் என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இத்தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. இந்நிலையில், இத்தொடரின் படப்பிடிப்பு முடிந்ததும் சுற்றுலா சென்றுள்ளார் சுஜிதா.

2010ஆம் ஆண்டு தனுஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சுஜிதா, தற்போது திருமண நாளையொட்டி தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.