ரொம்ப எதிர்பார்த்தோமே.! கடைசி நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிய முக்கிய போட்டியாளர்! அதிர்ச்சியில் ஆர்மி!!Oviya not participate in bigboss ultimate

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்தாவது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.

இதில் பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட முக்கிய சில பிரபலங்கள் மீண்டும் களமிறங்கவுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார். ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள இந்த நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ளது.

oviya

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். ஆனால் தற்போது ஓவியாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல்கள் பரவி வருகிறது. இது அவரது ஆர்மி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.