சினிமா

என்னாது, ஓவியாவின் அடுத்த படம் இவ்வளவு மோசமாக இருக்குமா! ரசிகர்கள் அதிர்ச்சி

Summary:

oviya next movie got A certificate

ஒருசில படங்களுக்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை ஓவியா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த குறும்புகள், கலாட்டாக்கள், நடனம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பின்னர் தன்னுடைய சாகப்போட்டியாளரான ஆராவை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா. இந்நிலையில் நடிகை ஓவியாவிற்காகா அவரது ரசிகர்கள் ஓவியா ஆர்மி என வலைதள பக்கங்களை தயார்செய்து அதில் ஓவியா புகழ் பாடினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். காஞ்சனா 3, களவாணி 2, 90 ML, ராஜ பீமா போன்ற படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 

இந்நிலையில் தணிக்கை குழுவிற்கு சென்ற 90 ML படத்திற்கு தணிக்கை குழுவானது A சான்றிதழ் வழங்கியுள்ளது. ஒரு பெண் சுயமாக முடிவெடுக்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையாக இந்த படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிதா உதூப் இயக்கத்தில் ADULT பிரிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார்.

ஓவியாவுடன் சேர்த்து பல பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஓவியா ரசிகர்கள் இந்த படம் ஒரு நல்ல ட்ரீட்டாக அமையும் எனவும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது.


Advertisement