அடிதூள்.. இனி வேற லெவல்தான்! பிக்பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி யார்னு பார்த்தீங்களா! செம குஷியில் ரசிகர்கள்!!oviya-going-to-join-in-bigboss-ultimate

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

அதில் பிக்பாஸில் 5 சீசன்களில் கலந்துக்கொண்ட 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அதாவது முதல் சீசனில் இருந்து ஜூலி, சினேகன், சுஜா வருணி இரண்டாவது சீசனில் இருந்து தாடி பாலாஜி, ஷாரிக் மூன்றாவது சீசனில் இருந்து வனிதா மற்றும் அபிராமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் நான்காம் சீசனில் இருந்து அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி , ஐந்தாம் சீசனில் இருந்து தாமரை,ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

bigboss

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஓவியா வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும், தற்போது குணமடைந்துள்ளதால் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.