சினிமா

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அசத்தலாக என்ட்ரி கொடுக்கும் ஓவியா! இந்த வீடியோவை பார்த்தீங்களா!! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அசத்தலாக என்ட்ரி கொடுக்கும் ஓவியா! தீயாய் பரவும் இந்த வீடியோவை பார்த்தீங்களா!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில தினங்களிலேயே டாஸ்க்குகளால் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

 இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட ஜூலி, சினேகன், சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி , தாமரை, ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.  மேலும் கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஓவியா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் ஓவியாவின் என்ட்ரியை விரும்பும் அவரது ரசிகர்கள் ஓவியா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் செல்வது போல வீடியோ எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்து சந்தோஷப்பட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement