ஏன் இந்த மாதிரியே கேட்டு உயிரை எடுக்குறீங்க.! செம டென்ஷனான நடிகை ஓவியா.! ஏன்னு பார்த்தீங்களா!!oviya-angry-on-question-about-marriage

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் மற்றும் ஆர்மி உருவானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா 90 எம்எல் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெருமையால் ஓவியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

oviya

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை. ஏன் இந்த மாதிரியே கேள்வி கேட்டு உயிரை எடுக்குறீங்க என காட்டத்துடன் பதில் அளித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.