பிக்பாஸ் சீசன் 2-ஆல் நோட்டா படத்தில் நல்ல வாய்ப்பை தவறவிட்டுட்டேன்...!



notta-no-in-yashika

பிக்பாஸ் சீசன் 2-ஆல் நோட்டா படத்தில் நல்ல வாய்ப்பை தவறவிட்டுட்டேன்...! 

"இருட்டு அறையில் முரட்டு குத்து" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் படத்தில் ஏராளமான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் யாஷிகா நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்து கொள்வதற்காக நோட்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டாராம் யாஷிகா ஆனந்த். அந்த வகையில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க, நோட்டா படத்தில் வெறும் 3 காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு வெளியேறியுள்ளார். 

இப்படத்தில், யாஷிகாவிற்கு கிட்ட தட்ட அரைமணிநேரம் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அரசியல் மூலமா நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யணும், அது இல்லாம அதை பணம் சம்பாதிக்கிறதுக்கான ஒரு வியாபாரமா மாத்திட்டாங்க. இப்போ இருக்கும் அரசியல்வாதிகள். இதையெல்லாம் எடுத்துச் சொல்ற மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான்.  ஆனால், அவர் அதனை வேண்டாம் என்று கூறிவிட்டு பிக் பாஸ்-2 சென்றுள்ளார்.  அதனால், தான் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடத்த இருக்கிறார்.