சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா? நித்யாமேனனின் புகைப்படத்தை கண்டு கிறங்கிப்போன ரசிகர்கள்!!

சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா? நித்யாமேனனின் புகைப்படத்தை கண்டு கிறங்கிப்போன ரசிகர்கள்!!


nithyamenon latest photo viral

கேரளாவை சேர்ந்தவர் பிரபல நடிகை நித்யா மேனன். இவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில் சித்தார்த்துடன் இணைந்து 180 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து வெப்பம், ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை,காஞ்சனா-2  என பல திரைப்படங்களில் நடித்த நித்யா மேனன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

nithyamenon

அதில் உடல் எடை சற்று அதிகமாகி குண்டாக காட்சியளித்தார். இவ்வாறு உடல் எடை பெருத்ததால் இவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என செய்திகள் வெளிவந்த நிலையில் நித்யா மேனன் தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார் 

இந்நிலையில் நித்ய மேனன் தற்போது அக்‌ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படம் ஒன்றிலும் அறிமுகமாகியுள்ளார், இப்படத்தில் இவர்களுடன் வித்யா பாலன், டாப்ஸி, இஷா தல்வார் என பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் நித்யா மேனன் மிக கவர்ச்சியாக சேலை அணிந்து கலந்துகொண்டுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.