சினிமா

பட வாய்ப்பே இல்லை! எதிர்பார்த்த வரவேற்பும் இல்லை! பிரபல இளம் நடிகை எடுத்த முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

nikitsha padel leave from south india cinema

தெலுங்கு சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த படம் புலி. இப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிஷா பட்டேல்.இவரது பூர்வீகம் குஜராத். ஆனால் இவர் லண்டனில் பிறந்து வளர்ந்துள்ளார்.

 நிகிஷா படேல் தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த என்னமோ ஏதோ,  கரையோரம் நகுலுடன் நாரதன், அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல்,  ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,  கன்னடம் மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

தவறான முடிவுகள்

இந்நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் நிகிஷா பட்டேல் கூறுகையில்,  தமிழ்,  தெலுங்கு,  கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் பெயர் சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மற்றும் பட வாய்ப்புகளும் இல்லை அதனால் தென்னிந்திய சினிமாவை விட்டு விலகப் போகிறேன்.

மீண்டும் லண்டனுக்குச் சென்று அங்கு நடிப்பு பயிற்சி பெறவிருப்பதாகவும்,  அங்கு பிரிட்டிஷ் சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கு ஆடிசன்களில் கலந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் சினிமாவிலிருந்து விலக எடுத்துள்ள முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement