"உடலுறவின்போது இதை பயன்படுத்துங்க" சிம்பு பட நடிகையின் சர்ச்சையான வீடியோ..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தமிழில் ஈஸ்வரன், பூமி, கலக தலைவன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் இப்படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் இதன் பிறகு தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
தற்போது தெலுங்கு மொழி சினிமாக்களில் பிஸியாக இருந்து வரும் நிதி அகர்வால், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மாடல் அழகியான நிதி அகர்வால் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தார். இது இணையத்தில் சர்ச்சையை எழுப்பியது.
இதற்கு பதிலளித்த நிதி அகர்வால் "ஆணுறை என்பது அனைவருக்கும் தேவையான விஷயம்தான். இதனை ஆபாசமாக பார்க்க கூடாது. மேலும் அவர் நடித்த ஆணுறை கம்பெனியின் பெயரைக் கூறி இந்த ஆணுறையை உபயோகித்தால் உடலுறவின் போது அதிக நேரம் செயல்படலாம்" என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.