சூர்யாவின் NGK குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்

சூர்யாவின் NGK குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்



ngk-teaser-date-announced-formerly

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

அரசியலை மையமாக கொண்ட இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் என்.ஜி.கே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வளியாகின. அதில் சூர்யா புகைப்படத்துடன் கூடிய பேனர்களில் காக்கும் முன்னேற்ற கழகம் (KMK ) என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

surya

இந்நிலையில் NGK படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது என ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.