சினிமா லைப் ஸ்டைல்

NGK படம் காண குடும்பத்துடன் சென்ற திரைப்பிரபலம் - சந்தோஷத்தில் ரசிகர்கள்

Summary:

Ngk-suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வந்த NGK படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் இது. ரசிகர்களால் 215 அடியில் கட்டவுட் எல்லாம் வைக்கப்படடது.

படத்திற்கு முதல் நாள் கலவையான விமர்சனங்கள் தான் எழுந்தது. பின் இயக்குனர் செல்வராகவன் சில விளக்கங்கள் கொடுத்தார். அதே வேளையில் படத்தில் வசூல் நல்ல முறையில் இருந்து வருகிறது.

இப்படத்திற்கு இயக்குனர் சுசீந்திரன் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு பெரிய பட்டாளமாக சென்றுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அவற்றில் முக்கியமானவை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா போன்றவை. சுசீந்திரன் தனது குடும்பத்துடன் NGK படத்தை பார்க்க வந்ததை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement