நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு தல அஜித்தின் 60 வது படத்தை பிரமாண்டமாக உருவாக்க முடிவு; ரசிகர்கள் உற்சாகம்.!

நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு தல அஜித்தின் 60 வது படத்தை பிரமாண்டமாக உருவாக்க முடிவு; ரசிகர்கள் உற்சாகம்.!


next year - thala ajith 60 th - new movie plan

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். 
 
மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே  மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது.

Thala ajith

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளான எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது. 
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அஜித் மீண்டும் சிறுத்தை சிவா உடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி சிவா உடன் மீண்டும் கூட்டணி வைக்காவிட்டாலும், அடுத்த படத்தை தேர்வு செய்யும் பணியில் அஜித் மும்முரமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அடுத்தாண்டு 2020 பொங்கல் பண்டிகைக்கு தல அஜித்தின் புதிய அட்டகாசமாக 60 வது படம் வெளியாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.