சினிமா

என்னது.. சர்ச்சைக்குள்ளான அந்த தொடரின் 3ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்!!

Summary:

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப்தொடரின் அடுத்த பாகத்தில் விஜய் ச

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப்தொடரின் அடுத்த பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் கடந்த 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. அந்த தொடரில் இலங்கைத் தமிழராக ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா  நடித்துள்ளார். மேலும் மனோஜ்பாய், பிரியாமணி, மைம்கோபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அந்த வெப் தொடர் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி இதனை ஒளிபரப்பகூடாது என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது ஒருபுறமிருக்க இந்த வெப் தொடருக்கு பாராட்டும் குவிந்து வந்தது. இந்த நிலையில் தி பேமிலிமேன் தொடரின் 3-ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The Family Man Season 2 Starrin Manoj Bajpayee Samantha And Priyamani  Review And Rating In Malayalam | ആദ്യ ഭാഗത്തിനൊപ്പം കട്ടയ്ക്ക് നില്‍ക്കുന്ന  രണ്ടാം സീസണ്‍; ഞെട്ടിക്കുക സമാന്ത ...

மேலும் அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. தி பேமிலிமேன் 2-வது சீசனிலேயே போராளி குழு தலைவராக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியதாகவும் ஆனால் அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 
 


Advertisement