சினிமா

அரசியலில் குதிக்கிறாரா வனிதா! அதுவும் இந்த கட்சியில் இணைகிறாரா? அவரே வெளியிட்ட தகவல்!

Summary:

நடிகை வனிதா பாஜக கட்சியில் இணையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா, பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் சில கலவையான விமர்சனங்களை பெற்றநிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளாரானார். அதனைத் தொடர்ந்து அவர் சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதாவிற்கு  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.  ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் சிலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வனிதா, பீட்டர்பால் போதைக்கு அடிமையாகி விட்டார் எனவே அவரை விட்டு பிரிவதாக கூறி மீண்டும் சர்ச்சைக்குள்ளானார்.

அதனை தொடர்ந்து நடிகை வனிதா பாஜக கட்சியில் இணையவிருப்பதாக, செய்திகள் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து வனிதா கூறுகையில்,  பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன். இப்போது அது குறித்து எதுவும் சொல்ல முடியாது என கூறியுள்ளார். இதற்கு முன்னர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில்  இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement