சினிமா

கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனரின் புதிய சீரியல்.! சன் டிவியில் எப்போதிலிருந்து தெரியுமா.?

Summary:

கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனரின் புதிய சீரியல்.! சன் டிவியில் எப்போதிலிருந்து தெரியுமா.?


தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னிலையில் இருந்து வரும் சேனல்களில் ஒன்று சன் டிவி. இந்த சேனல் முன்னிலை வகிக்க முக்கிய காரணம் இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் என்றே கூறலாம். மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு பல நல்ல கதைக்களத்துடன் மக்களை கவரும் வகையில், விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பல சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துவருகிறது சன் டிவி.

இந்தநிலையில், சன் டிவியில் அட்டகாசமான நடிகர் நடிகைகளுடன் உருவாக்கி புதிய சீரியலை களம் இறக்கப் போகின்றனர். மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிட்டுள்ளனர். சன்டிவியில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் புதிதாக வரப்போகிற சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலை மிகவும் பிரபலமான கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் இயக்கி வழங்குகிறார்.

மேலும் இந்த சீரியலில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு எதிர் நீச்சல் போட்டு வாழ்கிறார்கள் என்பதை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் பல முன்னணி நட்சத்திரங்களும் களமிறங்குகின்றனர். புது சீரியலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்படியும் இந்த சீரியலை ப்ரைம் டைமில் தான் ஒளிபரப்புவார்கள் என ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.


Advertisement